உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.விழுப்புரம் அடுத்த கரடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி விஜயகுமாரி, 26; நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று அதிகாலை 3:30 மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனை பகுதியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன், அவசர கால மருத்துவர் சின்னப்பெண் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமாரியை மீட்டு, இருவேல்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்சில் விஜயகுமாரிக்கு, ஆண் குழந்தை பிறந்தது. தாய், சேய் நலமாகவுள்ள நிலையில், இருவரும் இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை