மேலும் செய்திகள்
நாளை மின்தடை
8 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
8 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
8 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
8 hour(s) ago
விழுப்புரம்:திண்டிவனம் அடுத்த, கூட்டேரிப்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே, 2022 அக்டோபரில் கஞ்சா விற்பனை செய்த பண்ருட்டி ரயில்வே பீடர் சாலையை சேர்ந்த சிவஞானம் மனைவி விஜயா, 63, என்பவரை, 2 கிலோ கஞ்சாவுடன் மயிலம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் விழுப்புரத்தில் தங்கியிருந்த வாடகை வீட்டை சோதனை செய்து, 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விஜயா மீது, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கொடுமுடி சேரலாதன் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேசன், கஞ்சா கடத்தி விற்பனை செய்த விஜயாவிற்கு, 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால், மேலும் மூன்று ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.அதை தொடர்ந்து விஜயா, விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago