உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் ஆடிப்பூரம் 

விழுப்புரத்தில் ஆடிப்பூரம் 

விழுப்புரம்: விழுப்புரம் வீரவாழி மாரியம்மன், கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவில்களில் ஆடிப்பூர வழிபாடு நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு மூலவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள், உற்சவர் ஆண்டாள் சமேத சீனிவாச பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 10:30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோன்று, வீரவாழி மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர வழிபாடு நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு துவங்கியது. வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு வலையல்கள் அணிவித்து, வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்