உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

விழுப்புரம், : விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்றனர்.விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று காலை கூடுதல் எஸ்.பி., திருமால் தலைமையில், போலீசார் மற்றும் அமைச்சர் பணியாளர்கள் பங்கேற்று, குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.அதில், அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும், எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட, விழிப்புணர்வு ஏற்படுத்துவேன், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு பாடுபடுவேன் என உறுதி மொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை