உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அக்னிவீர் வாயு தேர்வு இளைஞர்களுக்கு அழைப்பு

அக்னிவீர் வாயு தேர்வு இளைஞர்களுக்கு அழைப்பு

விழுப்புரம், : அக்னிவீர் வாயு (இசை கலைஞர்) தேர்வுக்கு விருப்பமுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம்.கலெக்டர் செய்திக்குறிப்பு:அக்னிவீர் வாயு (இசை கலைஞர்) தேர்விற்கு பெங்களூருவில் உள்ள 7வது ஏர்மேன் மையத்தில் இந்திய ராணுவம் மூலம் வரும் ஜூலை 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது.இதில் பங்கேற்க நாளை 5ம் தேதிக்குள் https://agnipathvayu.cdac.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதிக்குப்பின் பிறந்தோர் மற்றும் கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 2ம் தேதிக்கு முன் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஏதாவது ஒரு இசை கருவி கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் 162 செ.மீ., உயரமும், பெண்கள் 152 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். அக்னிவீர் வாயு (இசை கலைஞர்) தேர்வுக்கு விருப்பம் உள்ள இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி