| ADDED : ஆக 13, 2024 06:10 AM
வானுார்: அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வானுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் பரமேஸ்வரி, விஸ்வநாதன், துணைத் தலைவர்கள் ஆறுமுகம், கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அர்ஜூனன், மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மா.கம்யூ., வட்ட செயலாளர்கள் முருகன், சுந்தரமூர்த்தி, பொருளாளர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பதிவு பெற்ற அனைவருக்கும் சுழற்சி முறையில் வேலை வழங்காமல், தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு இன்றி சட்ட கூலி 319 ரூபாய் வழங்க வேண்டும். நுாறு நாள் வேலை செய்யும் இடத்தில் குடிநீர், முதலுதவி பெறும் பெட்டி, குழந்தைகள் பாதுகாப்பு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.