உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோடை உழவு செய்ய வேளாண் அதிகாரி அறிவுரை

கோடை உழவு செய்ய வேளாண் அதிகாரி அறிவுரை

வானுார் : கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் உழவு செய்ய வேண்டும் என வானுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் அறிவுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தற்போது கோடை மழை வானுார் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லேசான மழை பெய்தது. ஓரிரு தினங்களில் கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. இந்த கோடை மழையை பயன்படுத்தி, அனைத்து விவசாயிகளும் உழவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் முந்தைய அறுவடைக்குப் பின், நிலத்தில் படிந்துள்ள இலை சருகுகள், அடிக்கட்டைகள் மற்றும் துார்கள் மண்ணில் புதைந்து உரமாவதுடன், மழை நீர் ஊடுருவலையும் அதிகரிக்கும். மண்வளம் காக்கப்பட்டு, நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கச்செய்து களை, பூச்சி மற்றும் நோய் ஆகிய அனைத்தும் ரசாயனங்களின்றி கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்