உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரி ஆய்வு

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரி ஆய்வு

திண்டிவனம், : உரக்கட்டுப்பாட்டு சட்டத்தை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மரக்காணம் தாலுகாவில் உள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், வேளாண்மை அலுவலர் தேவி ஆகியோர் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது, சரவணன் கூறுகையில், 'ஆடி பருவத்தில் மரக்காணம், முருக்கேரி, மற்றும் திண்டிவனம் பகுதிகளில் போதிய அளவு மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் நெல் நாற்று விடும் பணிகளையும் மானாவாரி உளுந்து மற்றும் வேர்க்கடலை விதைப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.விவசாயிகளுக்கு தேவையான யூரியா, சூப்பர் பாஸ்பேட், டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.உர விற்பனையாளர்கள் உர இருப்பு மற்றும் விலை விபரத்தினை நன்கு தெரியும் படி எழுதி வைத்திருக்க வேண்டும்.கொள்முதல் பட்டியல்கள், இருப்பு பதிவேடு முதலியவற்றை முறையாக தினசரி பராமரித்திட வேண்டும். உர மூட்டையின் மீதுள்ள விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி