உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இடைத்தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு

இடைத்தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஓட்டுப்பதிவு நிலை அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி விழுப்புரத்தில் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் கணினி மூலம் குலுக்கல் முறையில் நடந்த பணியை, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி தொடங்கி வைத்து கூறுகையில், 'விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. 275 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் ஓட்டுப்பதிவு நிலை அலுவலர்களுக்கு கணினி மூலம், குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதில், 1,355 தலைமை அலுவலர்கள் மற்றும் ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார். தேர்தல் பிரிவு அலுவலர் தமிழரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ