உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.சூர்யா கல்லுாரில் அரங்கில் ஏரோனாட்டிகல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். துறைத் தலைவர் முரளிதரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கல்யாண் சக்கரவர்த்தி, துணை முதல்வர் ஜெகன் சிறப்புரையாற்றினர்.பல்வேறு கல்லுாரிகளில் இருந்து ஏரோனாட்டிகல் துறை சார்ந்த முன்னாள் மாணவர்கள் பங்கேற்று தங்களுடைய வேலை வாய்ப்பு அனுபவங்கள் பற்றியும் எதிர்கால வேலை வாய்ப்பு குறித்தும் பேசினார்.துறை ஆசிரியர்கள் அசோக் பாண்டியன், கில்பர்ட் ராஜ் �ராம சுப்ரமணிய மூர்த்தி, துறை மாணவ, மாணவிகள் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ