உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கயத்துாரில் கட்சி கொடி கம்பம் பிரச்னையில் சுமூக முடிவு

கயத்துாரில் கட்சி கொடி கம்பம் பிரச்னையில் சுமூக முடிவு

விக்கிரவாண்டி: கயத்துாரில் கொடிக்கம்பம் பிரச்னை குறித்து ஆர்.டி.ஓ.,தலைமையில் சுமூக முடிவு ஏற்பட்டது.விக்கிரவாண்டி அடுத்த கயத்துார் கிராமத்தில் கடந்த 27ம் தேதி வி.சி., கொடி கம்பம் நட்டபோது ஏற்பட்ட பிரச்னையில் கிராம பொதுமக்கள் சார்பில் கிராமத்தில் உள்ள தி.மு.க., பா.ம.க., கட்சி கொடி கம்பங்களை அகற்றினர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் வி.சி.,கொடி கம்பம் அகற்றப்படடது.இதனால் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நீடித்தது. இதை தொடர்ந்து நேற்று மாலை விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சாகுல் அமீது தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடந்தது.கூட்டத்தில் வருவாய் துறையினர் ஒதுக்கீடு செய்யும் இடத்தில் கொடிக் கம்பம் நட இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதால் கூட்டத்தில் சுமூக முடிவு ஏற்பட்டது.கூட்டத்தில் விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ், டி.எஸ்.பி., நந்தகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், இரு தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை