உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்கிளை விழுந்து மூதாட்டி சாவு

மரக்கிளை விழுந்து மூதாட்டி சாவு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மரக்கிளை ஒடிந்து விழுந்து காயமடைந்த மூதாட்டி இறந்தார்.விழுப்புரம் அடுத்த பில்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராயன் மனைவி செல்லத்தாயி, 80. இவர், கடந்த 10ம் தேதி மாலை தனது வீட்டின் பின்புறம் நின்றுகொண்டிருந்தார். அப்போது, பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், அங்குள்ள மரத்தின் கிளை உடைந்து, அவரது தலையில் விழுந்ததில் படு காயமடைந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், விழுப்புரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ