உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதைப் பொருள் ஒழிப்பு ஊர்வலம்

போதைப் பொருள் ஒழிப்பு ஊர்வலம்

செஞ்சி, : செஞ்சியில் சங்கமம் கலை அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பேரூராட்சி அலுவலகம் முன் துவங்கிய ஊர்வலத்திற்கு, கல்லுாரி சேர்மன் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார், மேல்மலையனுார் ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், கல்லுாரி துணைச் சேர்மன் பரமசிவம் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ஹரிகுமார் வரவேற்றார்.தாசில்தார் ஏழுமலை, குற்றவியல் அரசு வழக்கறிஞர் சக்திவேல் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் சுரேஷ், கவுன்சிலர்கள் அஞ்சலை நெடுஞ்செழியன், பொன்னம்பலம்.இன்ஸ்பெக்டர்கள் அப்பாண்டைராஜன், பார்த்தசாரதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். நாட்டு நலப்பணிதிட்ட ஒருங்கிணைப்பாளர்யோகானந்த் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை