மேலும் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
1 hour(s) ago
வேலுநாச்சியார் நினைவு தினம் த.வெ.க., அனுசரிப்பு
1 hour(s) ago
தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல பூஜை
1 hour(s) ago
ரங்கபூபதி கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
1 hour(s) ago
விழுப்புரம்: அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இந்தாண்டு பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.www.skilltraining.tn.gov.inஇணையதளம் மூலம் 10ம் வகுப்பு, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கடந்த 10ம் தேதி முதல் வரும் ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பங்கள் பதிய அறிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பெண் அடிப்படையில் நடக்கும் இணைய தள கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல், கலந்தாய்வு பற்றிய விபரங்கள் கடைசி தேதிக்கு பின் இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.விழுப்புரம் மாவட்டத் தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளது. அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவு விபரங்களை அறிய www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளத்தை காணலாம்.விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும் போது அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண், ஜாதி சான்றிதழ், முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் மற்றும் இடம் பெயர்வு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் 750 ரூபாய் உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையல் கூலி, வரைபட கருவிகள், ஆடவர் தங்கும் விடுதி, இலவச பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தோருக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய். விண்ணப்பதாரர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங், யூபிஐ மூலம் செலுத்தலாம். இது தொடர்பாக மேலும் விபரங்கள் பெற விரும்புவோர் 9380114610, 8072217350, 9789695190 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago