உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதம், வயலின், மிருதங்கம் ஆகிய துறைகளில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று தேர்ச்சி பெற்று சென்றுள்ளனர்.இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பிரிவுகளில் சேர 12 முதல் 25 வயது வரை குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகியவற்றில் சேர கல்வி தகுதியாக 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.நாதஸ்வரம், தவில், தேவாரம் சேர எழுத, பயில தெரிந்தால் போதுமான தாகும். பயிற்சி காலம் 3 ஆண்டுகள். பயிற்சி முடிந்தவுடன் அரசு தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.சுய வேலை வாய்ப்பு மற்றும் அரசு பணிக்கும் இந்த கல்வி வழிவகுக்கும். இதில், ஆண், பெண் இருபாலரும் சேரலாம்.கல்விக் கட்டணம் ஆண்டிற்கு 350 ரூபாய் செலுத்த வேண்டும். பயிற்சி நேரம் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையாக திங்கள் தோறும் 400 ரூபாய் வழங்கப்படு கிறது.இலவச பஸ் சலுகை, குறைந்த கட்டணத்தில் ரயில் பயண சலுகை, இலவச பாடப்புத்தகம், அரசு விதிக்கு உட்பட்ட சலுகைகளில் வழங்கப்படுகிறது.விழுப்புரம் அரசு இசை பள்ளியில் சேர தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, நகராட்சி விளையாட்டு திடல், விழுப்புரம் என்ற முகவரியில் விண்ணப்பங்களைப் பெற்று கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ