உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டாக்டர்களுக்கு பாராட்டு விழா

டாக்டர்களுக்கு பாராட்டு விழா

கண்டாச்சிபுரம், : கண்டாச்சிபுரம் லயன்ஸ் கிளப் சார்பில் டாக்டர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.மருத்துவர் தின விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, டாக்டர் மூர்த்தி தலைமை தாங்கினார். லயன்ஸ் கிளப் தலைவர் கமலக்கண்ணன், செயலாளர் ஜெகதீசன், பொருளாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் குணசேகரன் வரவேற்றார்.விழாவில், முகையூர் ஒன்றிய அளவில் பணிபுரியும் டாக்டர்கள் மூர்த்தி, அறிவழகன், அருண், சுபா, அசோக்குமார், புருஷோத் உள்ளிட்ட டாக்டர்கள் கவுரவிக்கப்பட்டனர்.சாசனத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரவிக்குமார், மாவட்டத் தலைவர் டாக்டர் மூர்த்தி, பிரகாஷ், ராஜேந்திரன், குரு உள்ளிட்ட லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ