| ADDED : ஜூலை 18, 2024 05:02 AM
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த எடப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு உதவி தலைமை ஆசிரியை செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருநீலன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழாவையொட்டி, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு, சேகர் மீனாட்சி அறக்கட்டளை சார்பில் ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஜெகன், பிரகாஷ், சேதுராமன், மகாலட்சுமி, ஜெயப்பிரியா, நதியா, மணோன்மணி, மீனா ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.இதில், விழுப்புரம் லயன்ஸ் சங்கத் தலைவர் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் வேல்குமார், முரளிதரன், சேகர், வெங்கடேசன், ஆறுமுகம், தனசேகர் மற்றும் பலர் பங்கேற்றனர்.