உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடு புகுந்து நகை பறிப்பு அரியலுார் வாலிபர் கைது

வீடு புகுந்து நகை பறிப்பு அரியலுார் வாலிபர் கைது

திண்டிவனம்: வீட்டிற்குள் நுழைந்து, வாலிபரிடம் நகைகளை பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம், பெலாக்குப்பம் ரோட்டை சேர்ந்தவர் வடபழனி மகன் சுரதா,29; இவரிடம், அரியலுார் மாவட்டம், ஓலையூரை சேர்ந்த அலெக்சாண்டர், 26; மொபைல்போனில் பழக்கமானார்.கடந்த 8ம் தேதி இரவு, அலெக்சாண்டர், திண்டிவனத்தில் நடக்கும் திருமணத்திற்கு வந்துள்ளதாகவும், வீட்டு லோகேஷனை ேஷர் செய்யுமாறு கூறினார். சுரதா வீட்டு லோகேஷனை ஷேர் செய்ததும், இரவு 10:30 மணிக்கு சுராதா வீட்டிற்கு சென்ற அலெக்சாண்டர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி பத்தோ முக்கால் சவரன் நகைகளை பறித்து சென்றார்.இதுகுறித்து வடபழனி அளித்த புகாரின் பேரில் ரோஷணை இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்த, வீட்டில் இருந்த சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்து, திண்டிவனத்தில் பதுங்கியிருந்த அலெக்சாண்டரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒன்பதரை சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை