உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாலிபர் மீது தாக்குதல்: மூன்று பேர் கைது

வாலிபர் மீது தாக்குதல்: மூன்று பேர் கைது

மயிலம்: மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ்23; முருகவேல் 24; இருவரும் நண்பர்கள், அதே ஊரை சேர்ந்த சந்தோஷ்23; என்பவருக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில் நேற்ற முன்தினம் மதியம் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த செண்டூர் ஏழுமலை மகன் சந்தோஷ் 23; சேகர் மகன் ராஜ்குமார்,29; குமார் மகன் கார்த்தி26; ஆகியோர் சரண்ராஜை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சரண்ராஜ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து து சந்தோஷ், ராஜ்குமார், கார்த்தி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்