உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காப்பீட்டு கழக ஊழியர்கள் விழிப்புணர்வு பிரசாரம்  

காப்பீட்டு கழக ஊழியர்கள் விழிப்புணர்வு பிரசாரம்  

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்திட விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் நடந்த பிரசாரத்திற்கு விழுப்புரம் சங்க கிளை செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். லிக்காய் சங்க வேலுார் கோட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார் .குறிஞ்சி கலைக்குழு சார்பில் தவில் வினாயகம் தலைமையில் கலை நிகழ்ச்சி நடந்தது. வேலுார் கோட்ட செயலாளர் ராமன், கிளை செயலாளர்கள் வேலாயுதம், வைத்தியநாதன், சி.பி.எம்.,ஒன்றிய செயலாளர் கிருஷ் ணராஜ் ஆகியோர் மத்திய அரசு பட்ஜெட்டில் விதித்துள்ள இன்சுரன்ஸ் பிரிமீயம் மீதான ஜி.எஸ்.டி., வரி, அத்தியாவசிய பொருட் களின் மீதான கூடுதல் வரியை நீக்க கோரியும், பொதுப்பணித்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்தும் உரையாற்றினர்.முடிவில் விழுப்புரம் கிளைபொருளாளர் தங்கதுரை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை