உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு

மயிலம்: மயிலம் அடுத்த கொள்ளார் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம் அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, திண்டிவனம் கல்வி மாவட்ட ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பவானி முன்னிலை வகித்தார். அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார்.நிகழ்ச்சியில், பள்ளியின் பாலிகா பஞ்சாயத்து குழந்தைகள் மரக்கன்றுகளை நட்டனர். ஆசிரியர்கள் தமிழரசி, இந்திரா, சம்யுக்தா, சரண்யா, லோகநாதன்,ஆசிரியர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ