உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொட்டகை தீப்பிடித்து எரிந்து சேதம்

கொட்டகை தீப்பிடித்து எரிந்து சேதம்

மயிலம்: மயிலத்தில் வீட்டின் முன்புறம் அமைத்திருந்த கீற்றுக் கொட்டகை தீபிடித்து எரிந்து சாம்பல் ஆனது.மயிலம் காந்தி நகரில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மதிவாணன். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தமது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2:00 மணி அளவில் இவருடைய வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகை மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்த எரிந்து சாம்பல் ஆனது. இதில் அங்கிருந்த மேசை, நாற்காலி, டி.வி., இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கருகியது. இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்பு துறையினர் மற்றும் மயிலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை