உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் நகராட்சியில் பேட்டரி வாகனம் பழுது

திண்டிவனம் நகராட்சியில் பேட்டரி வாகனம் பழுது

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் குப்பை சேகரிக்கும் வாகனம் பழுதானதால், சாக்குப்பையில் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் நகராட்சியில் குப்பைகள் சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் திண்டிவனம் நகராட்சி குப்பை தொட்டிகள் இல்லாத நகராட்சி என்பதால், தெருக்களில் குப்பை தொட்டிகள் வைப்பதில்லை. இதனால் நகராட்சி வாகனங்கள் மூலம் காலை நேரத்தில் வீடு வீடாக சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வாங்கப்படுகின்றது. இதற்கிடையில் திண்டிவனம் செஞ்சி ரோடு, வசந்தபுரம், கங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நகராட்சியின் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பழுதாகிவிட்டது. இதனால் அந்தப்பகுதியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் துாய்மை பணியாளர்கள், கோணி பையை எடுத்துக்கொண்டு வீடு, வீடாக சென்று குப்பை சேரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் பழுதாகியுள்ள பேட்டரி வாகனத்தை உடனடியாக சீர் செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை