உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாய் மீது மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி

நாய் மீது மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நாய் மீது மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் இறந்தார்.திருவெண்ணைநல்லூர் அடுத்த காந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த அமாவாசை மகன் கிருபாபுரி,48; கூலி தொழிலாளி. இவர், கடந்த 9ம் தேதி, தனது பைக்கில் திருவெண்ணைநல்லூரிலிருந்து, விழுப்புரம் நோக்கி கோவிந்தபுரம் அருகே வந்தார்.அப்போது, திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்ததில், நிலைதடுமாறிய அவர் கிழே விழுந்து பலத்த காயமடைந்தார். அங்கிருந்த பொது மக்கள், ஆம்புலன்சில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருபாபுரி, நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து கிருபாபுரி மனைவி கலைவாணி அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி