உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்கில் சென்றவர் பஸ் மோதி பலி

பைக்கில் சென்றவர் பஸ் மோதி பலி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கல்லுாரி பஸ் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் இறந்தார்.விழுப்புரம் அடுத்த வளவனுார் பகுதியைச் சேர்ந்தவர் நித்யானந்தம், 41; டிரைவர். இவர், நேற்று முன்தினம் தனது பைக்கில் மடுகரையிலிருந்து, சிறுவந்தாடு நோக்கிச் சென்றார்.மோட்சகுளம் அருகே எதிர் திசையில் வந்த தனியார் கல்லுாரி பஸ் மோதியதில், நித்யானந்தம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.அவரது மனைவி சுகுணா அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ