உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ஜ., ஆலோசனைக் கூட்டம்

பா.ஜ., ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் குறித்து பா.ஜ., ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் குமாரசாமி வரவேற்றார். கூட்டத்தில், பா.ஜ., நிர்வாகிகள் இடையே பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை அறிமுகப்படுத்தி இடைத்தேர்தலில் வெற்றி பெற வைப்பது குறித்து மாநில அமைப்பு செயலாளர் கேசவ் விநாயகம், மாநிலச் செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர், மாநில துணைத் தலைவர் சம்பத் ஆகியோர் பேசினர்.பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன், விநாயகமூர்த்தி, முரளி ரகுராமன், வர்த்தக பிரிவு முருகன், ஒன்றிய தலைவர்கள் வெங்கடகிருஷ்ணன், மோகன், மாவட்ட துணைத் தலைவர் பார்த்திபன், இளைஞரணி பொதுச் செயலாளர் சிலம்பரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை