உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூர்யா கல்லூரியில் ரத்ததான முகாம்

சூர்யா கல்லூரியில் ரத்ததான முகாம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா பார்மசி கல்லூரியில் மாணவர்களின் ரத்ததான முகாம் நடந்தது.சூர்யா பார்மசி கல்லூரி, ஆதிபராசக்தி சக்தி மன்றம் விக்கிரவாண்டி வட்டார அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாமிற்கு கல்லூரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் விஜயாதலைமையிலான மருத்துவ குழுவினர் 50 மாணவர்களிடமிருந்து ரத்த தானம் பெற்றனர்.கல்லூரி முதல்வர் டாக்டர் அன்பழகன், இணை பேராசிரியர்கள் மகிமை உபகார வளவன், கார்த்தியாயினி, மன்ற நிர்வாகிகள் திருநாவுக்கரசு, செல்வகுமார் ,பாபு சக்தி, பழனி, ஞானகுமார், மருத்துவசமூக பணியாளர் அசோக்குமார், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை