உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

பா.ம.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க., வேட்பாளர் அன்புமணி தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியம், நல்லாபாளையம், கடையம், புது கருவாட்சி, பழைய கருவாட்சி, உடையநத்தம், மேல்வெங்கமூர், சி.என்.பாளையம், கொசப்பாளையம், அன்னியூர் உட்பட 25 கிராமங்களில் நடந்த தேர்தல் பிரசாரத்திற்கு வழக்கறிஞர் பாலு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தங்கஜோதி, மாவட்ட அமைப்பாளர்கள் பழனிவேல், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பிரசாரத்தில் வேட்பாளர் அன்புமணி வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்து பேசுகையில், 'நான் பா.ம.க.,வைச் சேர்ந்த வேட்பாளராக இருந்தாலும் தொகுதியை பொறுத்தவரை பொது வேட்பாளராகவே உங்களை நாடி ஓட்டு கேட்டு வருகிறேன். அதனால் தான் கடந்த 2016 தேர்தலில் 42 ஆயிரத்து 428 ஓட்டுகள் பெற்றேன். எனக்கு கட்சி பாகுபாடின்றி, தி.மு.க.,வில் இருப்பவர்கள் கூட ஓட்டு போடுவார்கள்' என்றார்.மாநில செயற்குழு சந்திரசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் தியாகராஜன், மாவட்ட தலைவர்கள் காமராஜ், குமரகுரு, துணைத் தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் சிவசக்தி, துணைத் தலைவர்கள் விஜயராஜ், ராஜேந்திரன், கிளைச் செயலாளர்கள் ஸ்ரீதரன், தமிழரசு, ஊடகப்பிரிவு ஆறுமுகம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ