உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புத்தக கண்காட்சி பயிலரங்கு

புத்தக கண்காட்சி பயிலரங்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லுாரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புத்தக கண்காட்சி பயிலரங்கு நடந்தது.கல்லுாரி கலையரங்கில் நடந்த பயிலரங்கிற்கு கல்லுாரி முதல்வர் முருகன் வரவேற்று, புத்தக கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் சேகர் வாசிப்பை நேசிப்போம் தலைப்பில், வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் பேசினார்.அறிவியல் இயக்க நிர்வாகி பாலமுருகன் 'கதை கதையாய் காரணமாம்' தலைப்பில், மாணவர்களிடையே கதை எப்படி சொல்வது, கதையை எப்படி உருவாக்குவது என்பதை செயல்முறையில் விளக்கி கூறினார்.அறிவியல் இயக்க நிர்வாகி அய்யனார் 'உலக புத்தக நாள்' தலைப்பில் உலக புத்தக நாள் ஏன், எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதையும் விளக்கினார். 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டதை மாணவிகள் பார்வையிட்டனர்.கல்லுாரி உதவி பேராசிரியர் நிஷாந்தினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ