| ADDED : ஜூலை 14, 2024 11:00 PM
செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கலை அறிவியல், கல்வியியல் கல்லுாரியில் பி.எஸ்.சி., - பி.எட்., ஒன்பதாவது ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் கோவிந்தராஜன் வரவேற்றார். கல்வி இயக்குனர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் சிவசங்கரன் வாழ்த்திப் பேசினார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.பேராசிரியர்கள் சசிகுமார், விஜயலட்சுமி, செல்வி, சரவணபவன், முத்துலட்சுமி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.கல்லுாரி முதல்வர் செந்தில் குமார் நன்றி கூறினார்.