| ADDED : மே 24, 2024 05:53 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி எதிரே சென்னை புறவழிச்சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி எதிரே சென்னை நோக்கிச் செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. அப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் நிறுத்த வேண்டும்.ஆனால், அரசு மற்றும் தனியார் பஸ்கள் புறவழிச்சாலையிலயே நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர்.போக்குவரத்து விதிகளை மதிக்காமல் புறவழிச்சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றுவதால், பின்தொடர்ந்து வரும் வாகனங்கள் நடுரோட்டிலேயே நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.புறவழிச்சாலை என்பதால் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, புறவழிச்சாலையில் நிறுத்தும் பஸ் டிரைவர்கள் மீது போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.