உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு மேற்கூரை அமைத்து தரப்படுமா? ஆண்டாண்டாக மழையில் நனையும் நெல் மூட்டைகள்

செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு மேற்கூரை அமைத்து தரப்படுமா? ஆண்டாண்டாக மழையில் நனையும் நெல் மூட்டைகள்

செஞ்சி: மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதை தடுக்கும் வகையில், செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் மேற்கூரை அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள மார்க்கெட் கமிட்டி, தமிழகத்திலேயே அதிக அளவில் நெல் கொண்டு வரப்படும் கமிட்டியாக உள்ளது. எனவே, தென் மாவட்ட வியாபாரிகள் செஞ்சிக்கு வந்து நெல்லை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக, நெல்லுக்கு அதிக விலை கிடைப்பதால், விழுப் புரம் மாவட்டம் மட்டுமின்றி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் இங்கு நெல் கொண்டு வருகின்றனர்.நெல் வரத்து அதிகமாக இருந்தபோதும், மார்க்கெட் கமிட்டியில் ஏலம் நடத்த போதிய இடமில்லை. இதனால், திறந்தவெளி களத்தில் ஏலம் நடத்துகின்றனர். இங்கு, நெல் அறுவடை சீசனில் தினசரி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருகிறது. ஆனால், 8,000 நெல் மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.இந்நிலையில், கடந்த 8ம் தேதி பெய்த திடீர் மழையில், ஏலத்திற்காக வைத்திருந்த விசாயிகளின் 4,000 நெல் மூட்டைகளும், வியாபாரிகளின் 2,000 நெல் மூட்டைகளும் நனைந்து சேதமானது. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.எனவே, செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் ஏல கூடங்களுக்கு மேற்கூரை அமைத்து தருவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தர தீர்வு காண மார்க்கெட் கமிட்டியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.மார்க்கெட் கமிட்டிக்கு கிழக்கில் 2 ஏக்கர் அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறையின் இடமும், தெற்கில் 2 ஏக்கர் அளவில் அரசு புறம்போக்கு இடமும் உள்ளது.இந்து சமய அறநிலையத்துறை இடத்தை குத்தகைக்கு பெற்றும், அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றியும் மார்க்கெட் கமிட்டியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
மே 12, 2024 07:10

தமிழக திமுக தலைமையிலான அரசின் நிதிநிலைமை சரியில்லாத காரணத்தால் பெரும்பாலான நிதி களைஞரின் பேனா சிலைகளுக்கும் களைஞரின் சமாதிக்கும் செலவாகிவிட்டது ஆகவே அடுத்த நிதியாண்டிலாவது கட்ட நிதி எதிர்பார்க்கலாம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை