உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இரு தரப்பு மோதல் 6 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல் 6 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: காணை அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.காணை அடுத்த ஆ.கூடலுாரைச் சேர்ந்தவர் சேகர், 57; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், கோவில் திருவிழாவுக்காக, அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், 28; முத்துக்குமரன், 32; பாஸ்கரன், 56; உள்ளிட்டோரிடம் வரி வசூலித்து, ஊர் தர்மகர்த்தாவிடம் கொடுத்துள்ளார்.அப்போது, முத்துக்குமரன், சேகர் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே சேகர் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த முத்துகிருஷ்ணன், முத்துக்குமரன், பாஸ்கரன் ஆகிய 3 பேரும், '2 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த வரி பணம் எங்கே' எனக் கேட்டு, அவரை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், முத்துகிருஷ்ணன், சேகர் உட்பட 6 பேர் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்