உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேர்தல் விதிமுறை மீறல் கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு

தேர்தல் விதிமுறை மீறல் கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு

விழுப்புரம், : விழுப்புரம், வளவனுார் பகுதியில் தேர்தல் விதிமுறையை மீறிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று வி.அகரம் மேம் பாலம் அருகே ரோந்து சென்றனர். அங்கு, தேர்தல் விதிமுறை மீறியும், அனுமதி யின்றியும் காதணி விழாவிற்காக டிஜிட்டல் பேனர் வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த வி.சி., கிளைச் செயலாளர் தமிழ், 42; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.அதே போல், விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார், நேற்று சிந்தாமணி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அங்கு தேர்தல் விதிமுறை மீறி பா.ஜ., - பா.ம.க., கட்சிகளின் தோரணம் வைத்திருந்த பா.ம.க., உறுப்பினர் சிந்தாமணி தங்கராசு, 45; மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை