உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

விக்கிரவாண்டி : ஸ்கூட்டியில் சென்ற பெண்ணின் செயினை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி வெண்ணிலா, 44; தனியார் நிறுவன ஊழியர்.இவர் நேற்று பகல் 12 மணிக்கு கண்டாச்சிபுரத்திலிருந்து சூரப்பட்டுக்கு தனது ஸ்கூட்டியில் பணம் வசூல் செய்ய சென்றார். வழியில் போன் வரவே மங்களபுரம் தனியார் அலுவலகம் அருகே நின்று பேசும்போது பைக்கில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத இருவர் வெண்ணிலா கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடு அறுத்து சென்றனர். புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிந்து வழிப்பறி ஆசாமிகளை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை