உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா

சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா

திண்டிவனம்: காஞ்சி காமகோடி பீடாதிபதி சுவாமியின் 131வது ஜெயந்தி விழா நடந்தது. திண்டிவனம் காஞ்சி காமகோடி பக்தர்கள் சார்பில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 131வது ஜெயந்தி விழா நேற்று முன்தினம் நடந்தது.இதையொட்டி, தீர்த்தக்குளம் மணக்குள விநாயகர் திருமண நிலையத்தில் சுவாமிக்கு ஸ்ரீருத்ர க்ரமார்ச்சனையும், விஷ்ணு சகஸ்ரநாம லலிதா சகஸ்ரநாம பாராயணமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணியளவில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பட வீதியுலா நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை