| ADDED : ஆக 08, 2024 12:17 AM
செஞ்சி : ஸ்ரீரங்க பூபதி கல்லுாரியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிகள் நடந்தன. செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் செஞ்சி, மேல்மலையனுார் ஒன்றியங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டிகள் நடந்தன. இதில் 72 பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். தாளாளர் வழக்கறிஞர் ரங்கபூபதி போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார். நிர்வாக அலுவலர் சிவசங்கரன் வாழ்த்தி பேசினார். உடற்கல்வி ஆசிரியர்கள் டேவிட் மாணிக்கராஜ், வாணி, லோகேஷ், விஜயன், சார்லஸ், ஆனந்தராஜ், சுப்பிரமணி, செந்தமிழ்ச்செல்வி, விமலா ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.உடற்கல்வி இயக்குனர் காசிநாதன், உடற்கல்வி ஆசிரியர்கள் கோமதி, விஜயலட்சுமி, சைலஜா ஆகியோர் செய்திருந்தனர். அனைத்து விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.