மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
செஞ்சி : செஞ்சி அடுத்த ஊரணி தாங்கல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட 6வது கட்ட சிறப்பு முகாம் நடந்தது.கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தமிழரசன் வரவேற்றார்.அமைச்சர் மஸ்தான் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, செஞ்சி ஒன்றிய துணைச் சேர்மன் ஜெயபாலன், தாசில்தார் ஏழுமலை, பி.டி.ஓ.,கள் சீத்தாலட்சுமி, முல்லை, மாவட்ட கவுன்சிலர் அகிலா பார்த்திபன், ஏ.பி.டி.ஓ.,கள் பழனி, குமார், கந்தசாமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.