| ADDED : ஜூலை 27, 2024 05:03 AM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுப்பேட்டையில் மக்களுடன் முதல்வர் முகாமில், பொது மக்களிடமிருந்து அமைச்சர் கோரிக்கை மனுக்களை பெற்றார். ஒலக்கூர் ஒன்றியம், வெள்ளிமேடுப்பேட்டையில் நேற்று காலை, 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாம் நடந்தது. வெள்ளிமேடுப்பேட்டை பஞ்சாயத்து தலைவர் மேனகாசரவணன் தலைமை தாங்கினார். ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணை சேர்மன் ராஜாராம் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மஸ்தான் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,மாசிலாமணி, திண்டிவனம் தாசில்தார் சிவா, ஒலக்கூர் பி.டி.ஓ.,க்கள் சரவணன், நாராயணன், மேலாளர் ஏகாம்பரம், ஒன்றியகவுன்சிலர் ஊரல் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.