மரக்காணம்: மரக்காணம் அருகே பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா மற்றும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்க விழா நடந்தது.பிரம்மதேசம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டம் மூலம் 63.54 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. அதற்கான திறப்பு விழா சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணெலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து பள்ளியில், அமைச்சர் மஸ்தான் குத்துவிளக்கேற்றி வைத்தார். தலைமை ஆசிரியர் திருமால், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிதம்பரநாதன் உள்பட பலர் கலந்து பங்கேற்றனர்.தொடர்ந்து, எண்டியூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் துவக்கிவைத்து பயனாளிகளுக்கு பசுந்தாள் விதைகளை வழங்கினார். முகாமிற்கு சேர்மன் தயாளன் தலைமை தாங்கினார். திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்சு நிகாம் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வரவேற்றார். தாசில்தார் பாலமுருகன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஷிலா தேவி, துணை சேர்மன் பழனி, கவுன்சிலர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். விழுப்புரம்
சிறுவந்தாடு கிராமத்தில் நடந்த விழாவிற்கு ஆர்.டி.ஓ., காஜா ஷாகுல்அமீது தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று சிறப்புரையாற்றினார்.முகாமில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் பிரபாகரன், சேர்மன் வாசன், பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், மணிவண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் பரத்குமார், செல்வகுமார், செந்தில்குமார், ராஜாமணி, ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.