உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதைப்பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஆலோசனை

போதைப்பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஆலோசனை

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தப் படுவதைத் தடுப்பது மற்றும் கண்காணிப்பது குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:தமிழக முதல்வர், போதைப் பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.அதனை கருத்தில் கொண்டு, விழுப்புரம் மாவட்டத்தில், போதை பொருள் கடத்தல், விற்பனை மீது தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ள வேண்டும். மேலும், அவர் கள் மீது கடும் சட்ட நடவ டிக்கைகைள் மேற்கொண்டு தண்டிக்க வேண்டும்.இது தொடர்பாக, அனைத்து கல்லுாரி மற்றும் பள்ளிகளில் போதை பொருளுக்கு எதிரான குழு (ஆன்டி டிரக்ஸ் கிளப்) துவங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.கூட்டத்தில் எஸ்.பி., தீபக் சிவாச், மாவட்ட குற்றவியல் அலுவலக மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ