கலெக்டர் ஆய்வு
அவலுார்பேட்டை: கடலி கிராமத்தில் அரசு திட்டத்தில் வீடு கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.மேல்மலையனுார் ஒன்றியம் கடலி கிராமத்தில் பாரத பிரதமர் ஜன்மன் திட்டத்தில் தலா 5.07 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பயனாளிகள் வீடுகள் கட்டி வருவதையும், பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2.40 ரூபாய் லட்சம் மதிப்பீட்டில் கட்டி வருவதையும் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது சப்-கலெக்டர் திவ்யான்சுநிகாம், தாசில்தார் தனலட்சுமி, பி.டி.ஓ.,க்கள் ஜெயசங்கர், சையத்முகமது மற்றும அதிகாரிகள் உடனிருந்தனர்.