உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாய், சேய் நலக்கட்டடம் கட்டும் பணிகள்: கலெக்டர் ஆய்வு

தாய், சேய் நலக்கட்டடம் கட்டும் பணிகள்: கலெக்டர் ஆய்வு

செஞ்சி: செஞ்சி அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தாய், சேய் நலக் கட்டடக் கட்டுமானப் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார்.செஞ்சி அரசு மருத்துவமனையில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில்,தாய், சேய் நலக் கட்டடம் கட்டி வருகின்றனர். இதை கலெக்டர் பழனி நேற்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு அவர் கூறியதாவது. தாய் சேய் நலக்கட்டடம் 1279 ச.மீ., பரப்பளவில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல்தளம் என இரண்டு தளங்களாக கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. தரைதளத்தில், முகப்பு அறை, பதிவு மற்றும் கணினி அறை, வரவேற்பு அறை, பணிநேர மருத்துவர் அறை, பிறந்த குழந்தைகள் புத்துயிர் பெறும் அறை, பிரசவ அறுவை அரங்கம், மின்தூக்கி அறை, பிரசவ முன் வார்டு, இருபாலர்களுக்கான தனித்தனி வார்டு கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.முதல்தளத்தில், அறுவை சிகிச்சை பிரிவு, செவிலியர் மற்றும் மருத்துவர் அறை, மீட்பு அறை, அறுவை அரங்கம், நோயாளிகள் தயார்படுத்தும் அறை, அறுவை சிகிச்சை மருத்துவர் அறை, பிரசவத்திற்கு முந்தைய அறை, இருபாலர்களுக்கான தனித்தனி வார்டு கழிப்பறை வசதிகள் இதில் வர உள்ளன. கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். ஆய்வின் போது திண்டிவனம் சப்கலெக்டர் திவ்யான்ஷு நிகம், செஞ்சி தாசில்தார் ஏழுமலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !