உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணி நிர்வாகிகளுடன் ஆலோசனை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணி நிர்வாகிகளுடன் ஆலோசனை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசார துவக்க பணிகள் குறித்து அமைச்சர் பொன்முடி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.விக்கிரவாண்டியில் நடந்த கூட்டத்திற்கு அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நைனா முகமது வரவேற்றார்.கூட்டத்தில் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் பிரசார பணிகள் குறித்தும் தொகுதியில் உள்ள முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். பின், வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டார்.தி.மு.க., வேட்பாளர் சிவா, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, மாவட்ட தலைவர் பாபு ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !