மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
3 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
3 hour(s) ago
மயிலம்: மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.சென்னையிலிருந்து கேரளா மாநிலம் கொச்சின் ஹார்பருக்கு லேப்டாப்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை சேலத்தைச் சேர்ந்த ராமராஜன், 40; ஓட்டினார். நேற்று அதிகாலை 4:00 மணியளவில் மயிலம் அடுத்த தென்பசியார் கிராமம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் லாரி டிரைவர் காயமின்றி தப்பினார்.லேப்டாப்கள் உரிய பாதுகாப்புடன் பேக்கிங் செய்யப்பட்டிருந்ததால் எவ்வித பாதிப்பும் இன்றி தப்பியது.சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் கண்டெய்னர் லாரியை அதிகாலை 5:00 மணியளவில் அப்புறப்படுத்தினர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
3 hour(s) ago
3 hour(s) ago