உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோடை வெயில் தாக்கம் தண்ணீர் தேடி தவித்த மான்

கோடை வெயில் தாக்கம் தண்ணீர் தேடி தவித்த மான்

விழுப்புரம், - விழுப்புரத்தில் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தேடி புள்ளி மான் குடியிருப்பு பகுதியில் தவித்து நின்றது.விழுப்புரம் சுற்றுப்புற கிராம பகுதிகளில் மயில்கள் மற்றும் மான்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு, வழுதரெட்டி, கண்டம்பாக்கம், மரகதபுரம், கண்டமானடி சுற்றுப்பகுதியில் மயில்கள் அதிகளவில் உள்ளன.இந்நிலையில், நேற்று காலை 8:00 மணிக்கு, விழுப்புரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பு, கல்லுாரி சாலையில் புதிதாக தொடங்கப்பட்ட அறிவு சார் மைய நுாலக கட்டடத்தின் அருகே புள்ளி மான் கோலியனுாரான் வாய்க்கால் புதர் பகுதியில் நின்றது.தகவலறிந்து அப்பகுதிக்கு வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் 10:00 மணிக்கு வந்தனர். ஆனால், அதற்குள் மான் வயல் பகுதிக்கு தப்பியோடியது.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் தண்ணீர் தேடி வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.விழுப்புரத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், ஏரி, குளம், குட்டைகளில் நீரின்றி வறண்டுள்ளதால், தண்ணீருக்காக விலங்கினங்கள் தவித்து வருகின்றன. அந்த வகையில் அருகே கிராம பகுதி புதர்களில் இருந்த புள்ளி மான், தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்குள் வந்திருப்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ