உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உயிரோடு இருப்பவர் பெயர் நீக்கம் இறந்தவருக்கு பூத் சிலிப் வழங்கல் திண்டிவனத்தில் குளறுபடி

உயிரோடு இருப்பவர் பெயர் நீக்கம் இறந்தவருக்கு பூத் சிலிப் வழங்கல் திண்டிவனத்தில் குளறுபடி

திண்டிவனம்: திண்டிவனத்தில் வாக்காளர் பட்டியலில், இறந்தவரின் பெயரை நீக்குவதற்கு பதிலாக, உயிரோடு இருப்பவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலையொட்டி வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், திண்டிவனம் நகராட்சி, 27வது வார்டு, ஆர்.எஸ்., பிள்ளை தெரு, நெ.17 என்ற முகவரியில் வசிக்கும், விழுப்புரம் மாவட்ட பா.ம.க., துணைச் செயலாளர் ரமேஷ் என்பவரது வீட்டில் உள்ளவர்களுக்கு பூத் சிலிப் கொடுக்கும் போது, ரமேஷ் பெயருக்கு பூத் சிலிப் கொடுக்கவில்லை.இதுபற்றி கேட்ட போது, லிஸ்ட்டில் அவர் பெயர் இல்லை. மற்றும் ரமேஷின் தந்தை பால்பாண்டியன் கடந்த 2022ம் ஆண்டு ஆக்டோபர் மாதம் இறந்து விட்டார். அவரது பெயரில் பூத் சிலிப் உள்ளது. ஆனால், உயிரோடு இருக்கும் ரமேஷ் பெயர் மட்டும் நீக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ரமேஷ், சம்மந்தபட்ட ஓட்டுச்சாவடி அலுவலரிடம் கேட்ட போது, இறந்த பால் பாண்டியன் பெயர் நீக்கம் செய்தற்கு பதிலாக, அவரது மகன் ரமேஷ் பெயர் தவறுதலாக நீக்கம் செய்யப்பட்ட விபரம் தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, ரமேஷ், ஓட்டுச்சாவடி நிலைஅலுவலரிடம், 'லோக்சபா தேர்தலில் தன்னுடைய ஓட்டை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மனு கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ