| ADDED : ஆக 13, 2024 06:10 AM
விழுப்புரம்: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் டேவிட் குணசீலன் தலைமை தாங்கினார். மத்திய செயற்குழு உறுப்பினர் சதீஷ் வரவேற்றார், ஊரக வளர்ச்சித் துறை சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் வாழ்த்திப் பேசினார். சுகாதார மேற்பார்வையாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சிவகுரு தொடக்க உரையாற்றினார்.அரசு பணியாளர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் சிங்காரம் சிறப்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர்கள் பூமாரி, ராஜேந்திரன், புருஷோத்தமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் வரும் 21ம் தேதி சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில் நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் அதிகளவில் சங்கத்தினர் பங்கேற்பது.சத்துணவு, அங்கன்வாடி, மஸ்துார் மற்றும் தினக் கூலியில் பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, அரசு அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட பொருளாளர் குமரவேல் நன்றி கூறினார்.