விழுப்புரம்: தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டுமென, த.மா.கா.,வினர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.விழுப்புரம் தெற்கு, வடக்கு மாவட்ட தலைவர்கள் தசரதன், ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, மக்கள் மீது பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ளது. குறிப்பாக பால், வீட்டு வரி, சொத்துவரி, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, குப்பைக்கும் வரி, குடிநீர் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு என கடந்த 3 ஆண்டுகளில் மக்களை பெறும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.மீண்டும் தற்போது மின் கட்டண உயர்வால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள் என பல தரப்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதனால், தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணத்தை உடனே திரும்ப பெற வேண்டும். பல நேரம் அறிவிக்கப்படாத மின் வெட்டு தொடர்கிறது. மின்வைப்பு தொகை, நிலை கட்டணம் உயர்வும், புதிய மின் உற்பத்தி திட்டம் இல்லாமல் உள்ளது.சோலார், காற்றாலை மின் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். தனியாரிடம் மின்சாரம் வாங்குவதைக் குறைத்து, தேவையான மின் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.