உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆர்ப்பாட்டம்: 50 பேர் மீது வழக்கு

ஆர்ப்பாட்டம்: 50 பேர் மீது வழக்கு

விழுப்புரம் : விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெடுஞ்சாலைப் பணியாளர்கள் 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் எதிரே நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது.அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்க மாநில துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர் அம்சராஜ், மாவட்ட தலைவர் சரவணன் உட்பட 50 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ